நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பு


மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெக்கபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, விசேட சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென நாடளாவிய ரிதியில் 9 ஆயிரம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கடமையில் ஈடுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments: