மட்டக்களப்பு மக்களால் ஆலைடியவேம்பு பிரதேச மக்களுக்கு நிவாரண உதவி


கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்,அப்பிரதேசத்தில் உளள் சுமார் 80  குடும்பங்களுக்கு, மட்டக்களப்பு மக்களால் வழங்கப்பட்ட  நிவாரண பொருட்களை “மக்களை பாதுகாப்போம்”என்ற அமைப்பின் ஊடாக  இன்றைய தினம் கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் அனுமதியுடன்   (28.12.2020) ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது.

குறித்த  அமைப்பின் ஊடாக, முடக்கப்பட்ட பிரதேச மக்களின் நிலைமையை மட்டக்களப்பு மக்களுக்கு தெரியப்படுத்திய போது, மட்டக்களப்பு மக்களும் வெளி பிரதேச மக்கள் சிலரும் நிவாரணப் பொருட்களை  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,இனி வரும் காலங்களில் கொரோனா தொற்றானது மிகவும் பாரதுாரமான விளைவுகளை  உண்டாக்கும் என்பதை கவனத்திற் கொண்டு,கொரோனா தொற்று காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை (உணவுப் பொதிகள்) வழங்க தயாராக உள்ளதாகவும்,பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் “மக்களை பாதுகாப்போம்“ என்ற அமைப்பின் பிரதம நிர்வாகி நா.விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments