அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பலத்த மழை

எஸ்.அஷ்ரப்கான்


அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (22) பலத்த  மழை பெய்துவருகிறது. 

காற்றின் வேகம், கடல் அலைகளின் சீற்றம் காரணமாக  கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி வள்ளங்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.

இதனால் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கரையோர பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான மருதமுனை, கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான பிரதேசத்தின் தாழ் நிலங்கள் மற்றும் வயல் பிரதேசங்கள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சில பிரசேங்கள் முடக்கம் செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் இக்காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: