மின்சக்தி அமைச்சர், மின்சார சபைக்கு விடுக்கும் விசேட அறிவுறுத்தல்


மழையுடனான வானிலை நிலவுகின்ற சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியாக இடம்பெறும் மின்விநியோகத் தடையை இயலுமான வரையில் குறைக்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின் விநியோகத்தை மறுசீரமைக்கவும், தொடர்ச்சியாகவும், சிறந்த முறையிலும் மின்சாரத்தை விநியோகிக்கவும், நாடளாவிய ரீதியில் செயற்றிட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சார பாவனையாளர்களுக்கு முதலிடம் வழங்கி செயற்படுவது அவசியமாகும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: