நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 91 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 84 பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 7 பேரும்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் விமான நிலையத்திலே பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: