சிகையலங்கார, வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதி


அக்கரைப்பற்று தெற்கு (ஆலையடிவேம்பு) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு இன்று முதல் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது 

மேலும் சிகையலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  , அனைத்து வர்த்தக நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும்,அவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் காலவரையறை இன்றி மூடப்படும் என அக்கரைப்பற்று தெற்கு  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.  

மேலும் தனிமைப்படுத்ப்படுள்ள 3 பகுதிகளை விடுவிக்கும் முயற்சியில் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் அதற்கான அறிவிப்பு இன்னும் 03 நாட்களில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

இன்று பிரதேசத்தில் 50 PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றதாகவும் பிரதேசத்தில் கொவிட் 19  தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதால் வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைக்கு அமைய இன்று முதல் திறக்க அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

No comments: