மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடனடி இடமாற்றம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: