உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் 57 பேரிடம் வாக்குமூலம்


உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற கட்டடத்தின் சிறப்பு துாய்மைப்படுத்தல் பிரிவினர்,பாதுகாப்பு பிரிவினர் மற்றும் உயர் நீதிமன்ற காரியாலய உத்தியோகத்தர்கள் போன்றோரிடம் இவ்வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வரும் வாரங்களில்  குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி.வி கெமராக்களை பரிசோதிக்க இருப்பதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

No comments: