உக்ரைனில் இருந்து வருகை தந்த 3 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா


உக்ரைனில் இருந்து, நாட்டிற்கு சுற்றாலாவிற்காக  வருகை தந்த பயணிகள் குழுவில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூவருக்கும் நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளை மருத்துவ சிகிச்சைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments: