மட்டக்களப்பில் (மரணித்த) நபருடன் தொடர்புடைய 11 நபர்களுக்கு கொரோனா தொற்றுமட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இதுவரை 131 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார் .

நேற்று முன்தினம் மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளதாகவும் மரணித்த நபர் 54 வயதான காத்தான்குடி பிதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்

மரணித்த நபருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் 11 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறித்த 11 தொற்றாளர்களில் ஒன்பது (9) நபர்கள் காத்தான்குடி பிதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் (2)ஆரையம்பதி பிதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பின்னர் இதுவரை 7807 பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்ரிஜன்ட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார் .

Post a Comment

0 Comments