இன்று முதல் 11 இடங்களில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு


மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் பிரதான 11 இடங்களில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றைய தினம் முதல் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள், நான்கு இடங்களில் மாத்திரமே இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இன்றைய தினத்தில் இருந்து 11 இடங்களில் இவ்வாறு ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும், பிரதான மற்றும் உள்வீதிகள் என மிக முக்கியமான 11 இடங்களிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அதிவேக வீதியில் பயணிக்கும் நபர்களுக்கும் இவ்வாறு சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் ஊடாக தொற்றாளர்களை அடையாளம் காண்பதுடன், அவர்கள் ஊடாக புதிய கொத்தணிகள் உருவாவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் இருந்து வெளியேரும் நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளில், இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

No comments: