ஆலைடியவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 04 புதிய தொற்றாளர்கள்

கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் கடந்த 23ம் திகதி மேற் கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனகளின் முடிவுகளின் அடிப்படையில் சற்று முன்னர் 04 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

புதிய நான்கு தொற்றாளர்களுடன் அலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைவதுடன் இதுரை 18 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 09 பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: