வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா
வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி பெண் கைதிகள் நால்வருக்கும் ஆண் கைதிகள் இருவருக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: