மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் வேலை செய்து வந்த வேளையில் கடந்த 16 ஆம் திகதி ஹோட்டலில் வேலை செய்த நபரும் இந்த பெண்ணும் கொழும்பிலிருந்து தலவாக்கலை மிடில்டன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
பின்னர் ஹோட்டலில் வேலை செய்த நபர் மீண்டும் கொழும்பிற்கு சென்ற நிலையில் அவருக்கு அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் ஹலாவத்தை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதுடன் கொழும்பு கோட்டை பொலிஸாரினால் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய தலவாகலை மிடில்டனில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு பொது சுகாதார பரிசோதகர்களினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோதே கொழும்பிலிருந்து வந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது,
இந்த பெண் வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்தவர் என்றும் தொற்றுக்குள்ளான பெண்ணை மாத்தறை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இவரோடு தொடர்புடைய உறவினர்,அயலவர்கள் என 13 பேரை சுயதனிமைக்குற்பட்டப்பட்டுள்ளதாகவும் கொட்டகலை சுகாதர பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.




No comments: