நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை - வர்த்தக அமைச்சர்
நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பொது மக்கள் தேவையில்லாமல் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை என ஊடக சந்திப்பொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே ஒரு கிலோகிராம் சீனி 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்பவர்கள் அதிகமான சீனியினை கொள்வனவு செய்வதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: