வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டின் மேல், சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக,வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ,திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர்வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: