பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயம்
2019ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளம் ஊடாக இன்று வெளியிடப்பட உள்ளது.
இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று பிற்பகல் பதிவேற்றப்பட உள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 41 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறமுடியுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவம், பொறியியல் மற்றும் ஏனைய துறைகளிலும் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: