மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்
கொரோனா தொற்று பரவலை அடுத்து மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடரும் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

No comments: