நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்


திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 368 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 4050 ஆக உயர்ந்துள்ளது.

அதன் படி தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3714 ஆக காணப்படுவதோடு,தற்போது நாட்டின் 27 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3792 ஆகவும் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: