தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்


நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்றக் குழு, இன்று ஒன்று கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரவிந்தகுமாரின் அங்கத்துவத்தை முழுமையாக நீக்கும் முடிவை அரசியல் குழுவும், சட்ட நடவடிக்கையை ,  பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணியும் எடுக்கும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்றைய  நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் மற்றும் பொதுசெயலாளர் சத்திரா சாப்டர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

No comments: