மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் வெளியான செய்தி
மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் இன்று மாலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன்,பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: