நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திவுலபிட்டிய மற்றும் பேலியகோட கொரோனா கொத்தணியில் 5 ஆயிரத்தை நெருங்கியது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 541 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங் களில் சேர்ந்தவர்கள், ஏனைய 499 பேர் திவுலபிட்டிய மற்றும் பேலியகோட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திவுலபிட்டிய மற்றும் பேலியகோட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களாக 4939 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள னர் .
தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8413 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4464 என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் 3933 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிருந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமை ச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: