நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்
நாட்டில் நேற்றைய தினத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும்,குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும்,கட்டார் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தலா ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3271ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3016 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மேலும் 242 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: