நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 339 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து 287 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 47 பேரும்,இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 5 பேரும் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ள அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: