கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகத்தடை
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதோடு குறித்த காலப்பகுதியில் கொழும்பு 01, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: