நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஓமானில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இவர்கள் நேற்றிரவு 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: