தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெயரிடும் கால வரையறை இன்றுடன் நிறைவு
தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சி இதுவரை தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளிக்கவில்லை.
குறித்த இரண்டு கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் காரணமாக இந்த நிலைமைய ஏற்பட்டுள்ள நிலையில்,இன்று முற்பகல் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது
எவ்வாறாயினும், இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் குறித்த இரண்டு கட்சிகளும் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் முன்கொண்டு நடாத்திச் செல்லப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் சடடத்தரணி நிமல்.பி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
No comments: