உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட டக்லஸ் தேவானந்தா

கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை,வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின்  தலைவராக ஈ.பி.டி.பி கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: