தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்-ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
இவருக்கு கம்பளை, பூண்டுலோயா, தலவாக்கலை, கொட்டகலை ஆகிய நகரங்களில் மக்கள் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு வருகை தந்த இவர் அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடியினை கம்பத்தில் ஏற்றினார்.
அங்கு திரண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில் பின்வாங்கப்போவதில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அதைப்போன்று இனிவரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்க போகும் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்திருந்நதாக தெரியவந்துள்ளது.

No comments: