மலைகளைப் பேசவிடுங்கள் நூல் அறிமுகவிழா
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
அரசியல் சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளர் மல்லியப்புசந்தி திலகரினால்
எழுதப்பட்ட மலைகளைப் பேசவிடுங்கள் நூலின் அறிமுக விழா
29.08.2020.சனிக்கிழமை பிற்பகல் 02மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகரசபை
மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மூத்த எழுத்தாளரும் முன்னால் மத்திய மாகாணசபை உபதலைவருமான மு.சிவலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைப்பெற்றது.
இதில் நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆர். எம்.ஜெயசீலன் வழங்கிவைத்ததோடு பத்தனை கல்வியியற் கல்லூரியின் முன்னால் உப பீடாதிபதியும் விரிவுரையாளரும் கல்வித்துறை வளவாளருமான வ.செல்வராஜா கருத்துரை வழங்கினார்.
நூல் அறிமுகத்தை வாசிப்புத்துறை விற்றார் நா.கிருஷ்ணகுமார் வழங்கியதோடு ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.






No comments: