மீண்டும் பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸ் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் கடைமைகளை பொறுப்பேற்றார்.
நவீன்,யோகராஜன் வெளியேற்றம் மீண்டும் பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸ் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் கடைமைகளை பொறுப்பேற்றார்.கடந்த காலங்களில் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவியில் போட்டித்தன்மை காணப்பட்டது.அந்தவகையில் சங்கத்தின் தலைவராக நவீன் திஸாநாயக்கவும் செயலாளராக யோகராஜனும் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்ற உத்தரவை மீறி இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக்காரியாலயமான தொழிலாளர் இல்லத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசித்த யோகராஜான் மற்றும் நவீன் திசாநாயக்கவை சட்டபூர்வமாக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் உத்தியோகபூர்வமான முறையில் பொதுச் செயலாளர் பதவியில் மீண்டும் தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார் வடிவேல் சுரேஷ்.



No comments: