தேர்தல் மத்திய நிலையங்கள் அனைத்தையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை

பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் முப்படையினரின் தலையீட்டில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments: