ஜீவனின் பயணத்தில் எங்களின் பாதமும் பின்தொடரும் வேலு யோகராஜ் தெரிவிப்பு
நீலமேகம் பிரசாந்த்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருக்கும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவனின் பயணத்தில் எங்களின் பாதங்களும் பயணிக்குமென நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்துக்காக தன்னை அர்ப்பணித்த போதும் அவர் எடுத்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டு எமது சேவைகளை மக்களிடத்தில் முன்னிருத்தினோம் அவரால் விட்டுச்சென்ற இடத்திலிருந்து மக்களுக்கு பல சேவைகளை செய்ய மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இராஜாங்க அமைச்சராகியுள்ள ஜீவன் தொண்டமான் செல்லும் பயணத்தில் எமது பாதங்களும் தொடர்ந்தும் செல்லுமென குறிப்பிட்டார்.

No comments: