பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாளை காலை 7.00 மணிக்கு பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் 12,985 வாக்களிப்பபு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இம்முறை பொதுத் தேர்தலில் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதோடு அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதுடன் 312 சுயேட்சைக் குழுக்களும் 2020 பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: