திருகோணமலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல்
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருகோணமலை-கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக் குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த வேட்பாளர் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாகவும் இது தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: