வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளான பாரவூர்தி
மொனராகலையில் இருந்து வட்டவளை மாட்டுப் பண்ணையொன்றுக்கு புல் கட்டுக்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இன்று அதிகாலை நுவரெலியா குறுக்கு வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியின் சாரதி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் நானுஓயா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: