119 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்ச்சியாக பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து வந்த சந்தேக நபர் கைது

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டப்பகுதியில், தொடர்ச்சியாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து வந்த சந்தேக நபர் ஒருவரை நோர்வூட் பொலிஸார் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து வந்தமை தொடர்பில் அழைப்பினை ஏற்படுத்திய இலக்கத்தின் உரிமையாளரை இனங்கண்டு கொள்வதற்காக நோர்வூட் பொலிஸார் ஹட்டன் நீதிமன்றத்தில் பீ அறிக்கையினை சமர்ப்பித்து அதன் ஊடாக அனுமதியினை பெற்று குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பொலிஸார், கையடக்க தொலைபேசியினை மீட்டுள்ளதோடு சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: