இன்னும் ஏமாற்றம் வேண்டாம் அபிவிருத்தியே மக்கள் கனவு -வினோகாந்த்


(-வினோகாந்த் ஊடகப்பிரிவு-)

எதிர்காலத்தில் மக்கள் அபிவிருத்தியினையே விரும்புகின்றனர் கடந்த காலங்களில் மக்கள் பொய்வாக்குறுதிகளை பெற்று ஏமாந்த வரலாற்றினை மாற்றி நிறைவேற்று அபிவிருத்தியினை நோக்கிய மக்கள் திசை மாறியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டத்தில் ஒரேயொரு தமிழ் வேட்பாளரும் கட்சியில் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேச அமைப்பாளருமான வினோகாந்த் தெரிவித்தார்

2020 பொதுத் தேர்தல் பரப்புரை இன்று அம்பாரை திருக்கோவில் மண்டானை பிரதேசத்தில் இடம் பெற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் ஏகோபித்த பிரதிநிதியாக தலைவர் சஜித் பிறேமதாச அவர்களை தெரிவு செய்தனர் சூழ்ச்சி காரணமான அது நிறைவேறவில்லை.

பொதுத்தேர்தலில் மக்கள் சஜித் பிறேமதாசவை பிரதமராக்க ஆவலுடன் எதிர்பாத்துள்ளனர்.

நிச்சயம் அவர் பிரதமரவது உறுதி அந்தவகையில் அவரின் பிரதி நிதியாக என்னை இங்கு நியமித்துள்ளார் நான் உங்களின் ஆணையுடன் பாராளுமன்றம் செல்வேன் .

கடந்த காலங்களைப் போன்று அதிகாரமற்ற பொய்வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் வாக்குறுதி வழங்குபவர்கள் அதிகாரமற்ற வாக்குறுதிகளையே வழங்குகின்றனர் என்னால் அதிகாரமுடைய வாக்குறுதிகளை வழங்க முடியும் ஏன் எனில் நான் கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்து விட்டு அரசியலில் நுளைந்தவன்.

தலைவர் சஜித் பிறேமதாசவின் வாக்குறுதியின் அடிப்படையில் என்னால் முன்மொழியப்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளம் புனரமைப்பு, தம்பட்டை ஆடைதொமிற்சாலை மீள் ஆரம்பம்  மற்றும் சிறு சுய தொழில் வாய்ப்புகள் என்று பல வேலைத்திட்டங்கள் என்னால் நிறைவேற்றப்படும்

என்னிடம் உங்களுக்கான திட்டங்கள் உண்டு திட்டமற்றவனாக நான் உங்கள் முன் நின்று கடந்த கால அரசியல்வாதிகளைப் போன்று பொய் வாக்குறுதி வழங்கி உங்களை ஏமாற்ற வில்லை.

கடந்த காலங்களில் சமுர்த்தி முத்திரை முதல் வீடமைப்பு திட்டம் முதலியவற்றை எமது மக்களுக்காக நான் முன்னின்று செய்திருக்கின்றேன் என்றார்.

No comments: