டிக்கோயா பிதேச மக்கள் பருகும் குடிநீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது


(எஸ்.சதீஸ்)

நோர்வுட் பிரதேசசபைக்குட்பட்ட டிக்கோயா தரவாளை கொளனிபகுதியில் உள்ள சிருவர்கள் மற்றும் முதியோர்கள் உள்ளடங்கலாக நூறு பேருக்கு வயிற்றுவலி காய்ச்சல் வாந்தி தலைசுற்று என்பன ஏற்பட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் மருந்து எடுத்துள்ளதாக அம்பகமு பிரதேசத்திற்கு பொருப்பான பொது சுகாதார பரீசோதகர் காமதேவன் தெரிவித்துள்ளார். 
இந்த சம்பவம் 07.07.2020 செவ்வாய்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது இதேவேலை இந்த நோய் ஏற்பட்டமைக்கான காரனம் குறித்த பகுயில் மக்கள் பருகும் குடி நீராக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியீட்டுள்ளனர் .

டிக்கோயா தரவாளை கொளனி பகுதியில் 160கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் குறித்தபகுதிக்கு சிங்கமலை வனபகுதியில் இருந்து குடி நீர்வழங்கபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் 

இதேவேலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பகமுவ பிரதேசத்திற்கு பொருப்பான சுகாதார பரீசோதகர் காமதேவன் தலைமையில் குறித்த பகுதியில் உள்ள நீர் தாங்கியினை சுத்தசெய்து நீர் தாங்கிக்கு குளோரின் இடம்பட்டுள்ளதாக பொது சுகாதார பரீசோதகர் தெரிவித்தார் 

நீரின் மாதிரி பரீசோதனைக்காக கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரீசோதகர் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் தரவாளை கொளனி பகுதிக்கு சென்ற நோர்வுட் பிரதேசசபையின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்

No comments: