திகாமடுல்லையின் முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரனே -துரைாஜசிங்கம் உறுதி


2020 பொதுத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அதிகளவு தேர்தல் வன்முறைகள் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறதாக எம்மால் அறியமுடிகிள்றது.

அந்தவகையில் திகாமடுல்ல மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று இனம் தெரியாத ஒரு முகநுால் கணக்கில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அல்ல அவர் தான் முதன்மை வேட்பாளர் என்று பொய்யுரைக்கின்றார் என்ற செய்தி  வெளியாகியிருந்தது .

இது தொடர்பிர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசிங்கம் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திய வேளை-

இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பான செய்தி என்றும் திகாமடுல்ல மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் என்று தெரிவித்தார்.

வேட்பு மனுக்களில் முதன்மை வேட்பாள் என்று பெயரிடப்படுபவர்களே முதன்மை வேட்பாளர்கள் திகமடுல்ல மாவட்டத்தின் தமிழரசுக்கட்டசி வேட்பு மனுவில் இவரது பெயரே உள்ள. எனவே  இது முற்றிலும் உண்மை பொய் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

முகநுால் செய்தி


No comments: