திகாமடுல்ல தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வினோவுடன் வாக்களித்த சஜித்


-வினோகாந்த் ஊடகப்பிரிவு-

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் அமைப்பாளரும் இளம் வேட்பாளருமாகிய திரு. வினோத்காந் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அமைச்சருமாகிய கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்திற்கு மக்கள் சந்திப்பிற்காக நேற்று வருகை தந்திருந்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக குடிநீர் இல்லாமல் கஸ்ட்டப்படும்  குடும்பங்கள் வாழ்கின்றன குறிப்பாக பொத்துவில் தொகுதியை எடுத்துக்கொண்டால் குண்டுமடு இன்ஸ்பெக்டர் ஏத்தம்,கோமாரி,செல்வபுரம்,ரொட்டை ஆகிய கிராமங்களிலே குடிநீர் பற்றாக்குறை-

திருக்கோவில் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் மண்டானை,தங்கவேலாயுதபுரம்,காயத்திரி கிராமம்,காஞ்சினங்குடா,கஞ்சிகுடியாரு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை-

அதே போன்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உற்பட்ட பனங்காடு,கண்ணகி கிராமம்,கபடாப்பெட்டி,அலிக்கம்பை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை

கல்முனையிலே பெரியநீலாவனை,நாவிதன்வெளியிலே சென்றல்கேம்,சவளக்கடை போன்ற இடங்களில் காணப்படும் குடிநீர் பற்றாக்குறையினை ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட  இளம் வேட்பாளர் வெ.வினோகாந்தின் வேண்டு கோளிற்கு அமைய நிச்சயம் தீர்த்து தருவதாக சஜித் பிறேமதாச வாக்களித்தார்.

மேலும்  இவை அனைத்தும் வேட்பாளர் வினேத்காந் அவர்களின் பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த பின்புதான்  இப்படியான பிரச்சினைகள் இங்கு காணப்படுவதாக தெரியவந்தது என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

தந்தையினால் ஆரம்பிக்கப்பட்ட ஆடை தொழிற்சலை திருக்கோவில் தம்பட்டை பகுதியில் மூடப்பட்டு காணப்படுகின்றது அதனை புனரமைப்பதன் ஊடாக அதனை மீளத்திறந்து இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம் எனவே அவற்றை செய்து தருவதாகவும்-

திருக்கோவில் பகுதியிலே 20000ம் மேற்பட்ட தரிசு நிலங்களை வேளாண்மை செய்யாமல் காணப்படும் காணிகள் அங்கு நீரில்லாமல் காணப்படுகின்றது எனவே அவற்றுக்கு நீரைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக கஞ்சிகுடியாரு,காஞ்சினங்குடா குளங்களை அலபிவிருத்தி செய்து வேளாண்மைக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் அதிக கறவை மாடுகள் காணப்படும் பகுதியாகவும் திகாமடுல்ல மாவட்டத்தின் அதிக பிரதேசங்கள் காணப்படுகின்றது.

எனவே பால் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தொழிலை வழங்குவதற்கும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

தனது தந்தையார் தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவை பேணி மக்களுக்கு பாரிய உதவியை செய்த ஒருவர் அவர் வழியிலே வரும் நானும் அவரை விட பாரிய உதவிகளை செய்ய கடமைப்பட்டிருக்கினறேன்.

ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்களாகிய நீங்கள் எனக்கு அதிகமான வாக்குகளை அழித்திருந்திர்கள் எனவே எனக்கு கடமைப்பாடுகள் இருக்கின்றது.

நீங்கள் காட்டிய அன்பிற்கு நான் கைமாரு செய்வேன் எனவே இவற்றை செய்வதற்கு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவே அடுத்தபடியாக இந்த பிரதேசத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வேன் என்றும் கூறினார். அதுமட்டுமல்லால் ஆலையடிவேம்புக்கு முதன் முதலாக வருகைதந்திருக்கின்றமை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்றார்

No comments: