ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் 30 பேர் வைத்தியசாலையில்


(எஸ்.சதீஸ்)

பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கிபயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியதில் பேருந்தின் சாரதி உட்பட மூன்றுபேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்

 இந்த சம்பவம் 10.07.2020.வெள்ளிகிழமை பிற்பகல் 12.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவயில் இருந்து ஹட்டன் நோக்கிசென்ற தனியார் பேருந்து அதிக வேகத்தின் காரனமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் தனியார் பேருந்திற்கு பின்னால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வந்தததாகவும் முன்னால் சென்ற பேருந்து வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் மண்மேட்டில் மோதியதன் காரணமாகவே 

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் சேதத்திற்கு உள்ளான பேருந்தை நோர்வுட் பொலிஸார் கைபற்றியதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.





No comments: