சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் நிலை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அங்கு தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதனால் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச நர்டுகளில் இந்தியா 3ம் நிலைக்கு தரப்படுத்தப்பட்டுள்ளது .

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரையில் 19 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளதாக அிவிக்கப்பட்டுள்ளது.

No comments: