பார ஊர்தி ஒன்று 100 அடிபள்ளத்தில் விபத்து


(எஸ்.சதீஸ்)

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானு ஒயா ராதாலை கார்லிபேக் பகுதியில் 100 அடிபள்ளத்தில் பாராஊர்தி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் பார ஊர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் காயங்களுக்கு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் இன்று மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

பொலனருவையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிவந்த பார ஊர்தி அரிசியினை நுவரெலியாவில் இறக்கிவிட்டு நல்லதன்னி பகுதிக்கு வரும்போது ரதாலை குருக்கு வீதி பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது 

குறித்த பார ஊர்திகள் நுவரெலியாவில் இருந்து டெஸ்போட் கிரிமிட்டி வழியாக போக்குவரத்தினை பயணிக்கவேண்டும் அந்த வீதியின் ஊடாக பாலம் ஒன்று கடந்த இரண்டுவருடகாலமாக புரனமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது .

ஆகவே தின் இந்த குருக்கு வீதியின் ஊடாக இது போன்ற பார ஊர்திகள் பயணிக்ககூடிய நிலமை ஏற்பட்டுள்ளதாக சுற்றிகாட்டபடுகின்றமை குறிப்பிடதக்கது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

No comments: