தீர்வை பெற்றுக் கொடுக்காமல் பாராளுமன்றத்தில் தூங்குகின்றனர். -கோபிநாத்


(கனகராசா சரவணன்)

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருவதாக அவர்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் செல்கின்றவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்காமல் பாராளுமன்றத்தில் தூங்குகின்றனர்.

என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்

இம்முறை 2020 பாராளுமன்ற தேர்தலில் நான் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் ஒரு வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.

இதுவரை காலமும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் நல்லிணக்க மற்றும் இந்தக் கலாச்சார அமைச்சில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்ச்சி நிறுவனத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக இதுவரை காலமும் பணியாற்றி வந்தேன்.

கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் நிலவிய பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு என்னால் முடிந்தளவு குறைகளை கேட்டறிந்து அதனை முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் இணைப்பாளராக இருந்தவேளை அவரிடம் சமர்ப்பித்து அந்த காரியங்களை நிறைவேற்றியுள்ளேன்.

அரசியலுக்கு வருவதற்க்கு முன் எனக்கு கிடைத்த இந்த இணைப்பாளர் பதவியை வைத்து பல பாடசாலைகள் கலாச்சார மண்டபங்கள் சிறுவர் பூங்கா பாலர் பாடசாலைகள் போன்றவற்றில் ஏற்பட்ட குறைபாடுகளை இணங்கண்டு பூர்த்தி செய்வதற்கு அமைவாக அந்தந்த அமைப்புக்கள் என்னை முன்னிற்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று நான் எனது உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்து இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இந்த மாவட்டத்தை இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதே. அதே போல இங்குள்ள பல்வேறு பிரச்சினைகள் காணிப் பிரச்சினையும் சரி அதேபோல் வேறு வேறு பிரச்சினைகளில் முகங்கொடுப்பதற்குரிய சரியான அரசியல் தலைமைத்துவம் இங்கு காணப்படவில்லை என்பதற்காக தான் இன்று பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.

எனவே கடந்த காலங்களில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்பதே மக்களின் கேள்வியாகும் நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை அரசியலுக்கு வருவது அரசியலில் இருந்து விடுபடுவது அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அதேபோல் அவர்களுக்கு வாக்களிப்பது வாக்களிக்காமல் விடுவது அது மக்களின் உரிமை.

கடந்த காலங்களில் பல கிராமங்களுக்கு சென்ற வேளை என்னிடம் கூறிய ஒரேஒரு கருத்து பல கட்சிகள் வந்தன பல வேட்பாளர்கள் வந்தார்கள் பல தசாப்த காலங்களாக பலரை ஆதரித்துள்ளோம் ஆனால் எவருமே தேர்தல் முடிந்தபிறகு அவர்களை அடுத்த தேர்தல் வரும் வரையிலான 5 வருடத்தில் காணமுடியாத நிலைதான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று குறைந்தது மூன்று பேர் பாராளுமன்றம் செல்கின்றார்கள்.

ஆகவே இந்த மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கோ தீர்ப்பதற்க்கோ அதிகாரமானது அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதிகாரத்தைப் பெற்றவர்கள் தூங்கினால் அல்லது செய்றபடாமல் விட்டால் அந்த சமூகம் அல்லது அந்த இனம் பாரிய விளைவை நோக்கிச் செல்லும்.

ஆகவே கடந்த காலங்களில் ஏற்பட்ட இந்த குறைபாடுகளால் தான் மக்கள் அரசியலை வெறுக்கின்றார்கள்.

ஒரு சமூகத்தின் ஐந்து வருட முன்னேற்றத்தினை ஐந்து வருட பிரச்சினையை வெறுமன இன்று அரிசி பருப்பு சீனி பொருட்களை கொடுப்பதன் மூலம் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி வாங்கிய காலங்களும் உண்டு. ஆனால் இம்முறை தேர்தலானது அவ்வாறு மக்கள் வாங்கிவிட்டு இவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இல்லை என்றார்.

No comments: