அஞ்சல் மூல வாக்குச்சீட்டு இன்று முதல் வினியோகம்


2020 பாராளுமன்ற பொது தேர்தலலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் இன்று முதல் வினியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை எதிர்வரும் 14. 15. 16. 17 ஆகிய திகதிகளில் அஞ்சல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிந்து கொள்ள முடியும் என்பதுடன் 20. 21 ம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் 7 இலட்சத்தி 5 ஆயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று வாக்கெடுப்பு நேரத்தினை அதிகரிக்கும் விசேட சந்திப்பு இடம் பெறவுள்ளது.

No comments: