பொது தேர்தலுக்கான வாக்கெண்ணும் ஒத்திகை இன்று


எதிர்வரும் 2020.08.05 பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் ஒத்தினை நிகழ்வு இன்று கண்டி மற்றும் குருநாகல் மாவட்ட செயலகங்களில் இன்று காலை 08 மணிக்கு இடம் பெறவுள்ளது.

நாளையதினம் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறைவு செய்வதற்கு அரசாங்க அச்சு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது ஹம்பகா மாவட்ட வாக்குச்சீட்டு அச்சிடும்  பணி மாத்திரம் எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, திருகோணமலை மாவட்டங்களிற்கான வாக்கு சீட்டுகளை நாளை மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.No comments: