நீங்களும் கைது செய்யப்படலாம் அவதானம்


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மூன்று மாதங்களாக உரிய சுகாதார முறைகளை கடைப்படித்து  மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் சுகாதார முறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உரிய சுகாதார முறைகளை பின்பற்ற தவறுவோரை நோய் தடுப்பு தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: