அரச பணியாளர்களுக்கு ஓர் முக்கிய செய்தி


அரச பணியாளர்களின் பணிக்கு சமூகமளிக்கும் நேரத்தினை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான பரிந்துரைகளை முன்வைக்க மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

வாகன நெரிசல் மற்றும் சமூக இடைவெளியினை கருத்தில் கொண்டு இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந் நடவடிக்கை பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இடம் பெறுவதாகவும் ஆடுத்த வாரமளவில் இதன் அறிக்கை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: