விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


(ஏ.ஆர்.எம். றிபாஸ்)

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேர்வில வீதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில்

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (1) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த டி .எல். சதாத் 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதோடு மற்றொருவர் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.மாஹாத் வயது (40) என்பவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இவ்விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது

கந்தளாய் சீனியாலை பகுதிக்குச் சென்று மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்குச் சென்ற வேளை கந்தளாயில் இருந்து வான்எல பகுதிக்கு வெள்ளை கார் ஒன்றில் நான்கு இளைஞர்கள் சென்றுள்ளதாகவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: